போர்க்கால அடிப்படையில் செயல்படுக…. கி.வீரமணி வலியுறுத்தல்

 

போர்க்கால அடிப்படையில் செயல்படுக…. கி.வீரமணி வலியுறுத்தல்

போர்க்கால அடிப்படையில் செயல்படுக என்ற தமிழக அரசுக்கு வலியுறித்தி இருக்கிறார் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி.

போர்க்கால அடிப்படையில் செயல்படுக…. கி.வீரமணி வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதியில் பொங்கல் கொண்டாடி மகிழ வேண்டிய நிலையில், கடும் மழையால் அழுகிய பயிர்களைக் கண்டு அழுது, தம் உழைப்பு இப்படி இயற்கையின் ஒத்துழைப்பின்மையால் வீணாக, விழலுக்கிறைத்த நீராகிவிட்டதே என்ற வேதனை தேள் கொட்டிய நிலையில் உழவர் பெருமக்கள் கண்ணீர் வற்றாது வளர்ந்து வருகிறது என்று சொல்லும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, ஆகவே, தமிழ்நாடு அரசு இடைக்கால நிவாரண நிதியை விவசாயிகளுக்கு வழங்கிட போர்க்கால அடிப்படையில் செயல்படுக என்று வலியுறுத்தி இருக்கிறார்.

போர்க்கால அடிப்படையில் செயல்படுக…. கி.வீரமணி வலியுறுத்தல்

தனது டுவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவிட்டிருக்கும் வீரமணி, முன்னதாக அஞ்சல் துறை கணக்காளர்கள் தேர்வினை ஆங்கிலம், இந்தி வாயிலாக மட்டுமே எழுத முடியும் என்று பின்னர் பின்வாங்கிய மத்திய அரசின் அறிவிக்கை குறித்து, மத்திய அஞ்சல் துறை தேர்வுகள் எழுத தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பால், மத்திய அரசு புதியதோர் ஆணை பிறப்பித்து, தமிழிலும் தேர்வு எழுதலாம் என்று தெரிவித்துள்ளது. இதை வரவேற்கிறோம். எதிர்ப்புக்குரல் கொடுத்து தமிழ் மொழியின் உரிமையை நிலை நாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்குரியவர்கள் ஆவர் என்று பதிவிட்டிருக்கிறார்.