இந்த 2 நாளில் நிழலே இருக்காதாம்!…. உங்க பகுதியில எப்போ வரும்னு தெரிஞ்சுகோங்க?

 

இந்த 2 நாளில் நிழலே இருக்காதாம்!…. உங்க பகுதியில எப்போ வரும்னு தெரிஞ்சுகோங்க?

ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல சிறியதாகி கொண்டே வரும். சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகி விடும். அதாவது நிழல் காலுக்கு கீழே இருக்கும். அதேபோல செங்குத்தாக நிற்கும் பொருட்களின் மீது விழும் நிழலானது நமது கண்களுக்குத் தெரியாது. இதனையே நிழலில்லா நாள் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே ஒரு இடத்தில் செங்குத்தாக நிற்கும். குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட இரு நாட்களில் நிழலில்லா நாட்கள் ஏற்படும்.

இந்த 2 நாளில் நிழலே இருக்காதாம்!…. உங்க பகுதியில எப்போ வரும்னு தெரிஞ்சுகோங்க?
இந்த 2 நாளில் நிழலே இருக்காதாம்!…. உங்க பகுதியில எப்போ வரும்னு தெரிஞ்சுகோங்க?

மகர ரேகைக்கு 23.5 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.5 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வை காண முடியும். அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் இது நிகழ்வது இல்லை. அவ்விடத்தின் தீர்க்கரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும். இவ்வாறு இந்த நிழலில்லா நாளானது எந்த நேரத்தில், எந்தப் பகுதிகளில் நடைபெறும் என்பதனைக் கீழுள்ள விவரங்களை வைத்து தெரிந்து கொள்ளவும்.

இந்த 2 நாளில் நிழலே இருக்காதாம்!…. உங்க பகுதியில எப்போ வரும்னு தெரிஞ்சுகோங்க?

ஏப்.10, செப்.1 – கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம்

ஏப்.11, ஆக 31 – கோவளம், திருவனந்தபுரம், திருச்செந்தூர்

ஏப்.12, ஆக.30 – தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி

ஏப்.13, ஆக.29 – சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராமேசுவரம், ராமநாதபுரம்

ஏப்.14, ஆக.28 – கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி

ஏப்.15, ஆக. 27- தேனி, ஆண்டிபட்டி, திருமங்கலம், மதுரை, சிவகங்கை, காரைக்குட

ஏப்.16, ஆக.26 – வால்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம்

ஏப்.17, ஆக.25 – பாலக்காடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, பழநி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை

ஏப்.18, ஆக. 24 – கோவை, கூடலூர், பல்லடம், திருப்பூர், காங்கயம், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார்

ஏப்.19, 23 – ஊட்டி, கோத்தகிரி, அவினாசி, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், சீர்காழி, சிதம்பரம்

ஏப்.20, ஆக.22 – முதுமலை, பவானி, மேட்டூர், சேலம், கள்ளக்குறிச்சி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர்

ஏப்.21, ஆக.21 – தர்மபுரி, சங்கராபுரம், விழுப்புரம், புதுச்சேரி

ஏப்.22, ஆக.20 – திருவண்ணாமலை, செங்கம், திண்டிவனம்

ஏப்.23, ஆக.19 – ஒசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம்

ஏப்.24, ஆக.18 – குடியாத்தம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், திருப்பெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை