தமிழகத்தில் 5 கட்ட தேர்தலா ? ஆளும்கட்சி பிரமுகர் கிளப்பும் பகீர் ?

 

தமிழகத்தில்  5 கட்ட  தேர்தலா ? ஆளும்கட்சி பிரமுகர் கிளப்பும்  பகீர் ?

தமிழகத்தில் இதுவரை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தல் 5 கட்டமாக நடக்க வாய்ப்புள்ளதாக ஒரு பகீர் தகவலை கூறினார் மத்தியில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர். இது தொடர்பாக அவர் கூறியதன் மூலம், மத்தியில் ஆளும் கட்சி மெகா பிளானுடன் தமிழகத்தில் இறங்க உள்ளதை தெரிந்து கொள்ள முடிந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளது. தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை முடிவு செய்யவிலை என்றாலும், அடுத்த மாத இறுதியில், அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில்  5 கட்ட  தேர்தலா ? ஆளும்கட்சி பிரமுகர் கிளப்பும்  பகீர் ?

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடக்க வாய்ப்புள்ளதாக மத்தியில் ஆளும்கட்சியின் மாநில பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். இதுவரை தமிழகத்தில் ஒரே கட்டமாக நடந்த தேர்தலைப் போல, இந்த முறை நடக்காது. 5 கட்டமாக அல்லது குறைந்தபட்சம் 3 கட்ட தேர்தல் என்கிற அறிவிப்பினை எதிர்பார்க்கலாம் என்றார்.

தமிழகத்தில்  5 கட்ட  தேர்தலா ? ஆளும்கட்சி பிரமுகர் கிளப்பும்  பகீர் ?

மத்திய அரசுடன் வலுவான இணைப்பில் அதிமுக உள்ளது. இந்த முறையும், அதிமுக வெற்றிபெற்றுவிட்டால், தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சி என்கிற பெருமை அந்த கட்சிக்கு கிடைக்கும். ஆனால் அதைவிடவும் முக்கியமாக, தமிழக சட்டமன்றத்தில், இந்த முறை தங்களது உறுப்பினர் ஒருவராவது மலரோடு உள்ளே சென்று, மலர்ந்து விட்டது பாருங்கள் என கர்ஜிக்க வேண்டும் என்கிற வேகம் உள்ளது. அதற்கான காய்கள் வேகமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. இதே ஆட்சி நீடிக்கும்பட்சத்தில், கிட்டத்தட்ட தற்போது உள்ளதுபோல மத்திய அரசுக்கு இணக்கமான அரசாகவே இருக்கும். எனவே அதற்கு சாதகமாக களத்தை அமைத்துக் கொடுக்கவே மத்திய அரசு விரும்புகிறது என்றார்.

திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலில் பலத்தை காட்டினாலும், மத்திய அரசு சில சாதகமான சமிக்கைகளை அதிமுகவுக்கு வழங்கும். குறிப்பாக தேர்தலை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், 3 முதல் 5 கட்டங்களாக நடத்தினால், ஆளும் அரசுக்கு சாதகமாக இருக்கும் என்பதுதான் அந்த கணக்கு.

தமிழகத்தில்  5 கட்ட  தேர்தலா ? ஆளும்கட்சி பிரமுகர் கிளப்பும்  பகீர் ?

பீகார் மாநிலத்தில், ஆளும்கட்சியாக இருந்த நிதிஷ்குமாருக்கு செல்வாக்கு குறைந்ததை தேர்தலுக்கு முன்பே கணிக்கப்பட்டன. தேஜஸ்விக்கு சாதகமான அலை உள்ளதை அறிந்துதான், அங்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டன. அதன்மூலம் தேர்தல் பணிகளில் அமைச்சர்கள் கவலையில்லாமல் ஈடுபட்டனர். அமைச்சர்கள் சொல்வதற்கு ஏற்ப அதிகாரிகளும் களத்தில் வேலை செய்தனர். அங்கு திட்டமிட்டதுபோல நடந்தது. நிதிஷ்குமார் பின்னடைவை சந்தித்தாலும், பாஜக தயவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விட்டார்.

அப்படியான ஒரு மாடலை, தமிழத்திலும் செயல்படுத்த உள்ளார்களாம். ஏற்கெனவே பீகார் மாடல் தேர்தல்தான் தமிழகத்திலும் இருக்கும் என கட்சியினருக்கு சொல்லப்பட்டு விட்டது. எனவே கூட்டணி வெற்றி பெற வேண்டும், தங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றம் செல்ல வேண்டும். அதற்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் என கூட்டணி தலைமைக்கு சொல்லப்பட்டுள்ளது.தேர்தலுக்கு முன்பே சாதகமான அதிகாரிகளை நியமித்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில்  5 கட்ட  தேர்தலா ? ஆளும்கட்சி பிரமுகர் கிளப்பும்  பகீர் ?

இதற்கு ஏதுவாகத்தான் தேர்தல் பல கட்டங்களாக நடத்தும் திட்டமும். அப்படி செய்வதன் மூலம் பிரச்சார வேலைகளை எளிதாக்க முடியும் . அமைச்சர்களை ஒவ்வொரு தொகுதியிலும் வேலை செய்ய வைத்து வெற்றியை சாத்தியப் படுத்தலாம் என பேசப்பட்டுள்ளது. இப்படி செய்தால், மத்திய அரசு திட்டங்களையும் தீவிரமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். கூட்டணியில் மாவட்டத்துக்கு ஒரு தொகுதியாவது கேட்டிருக்கிறோம். அப்படி வாங்கினால், அந்த பகுதியில் குவிந்து வேலை செய்வதற்கு வசதியாக இருக்கும். இந்த தேர்தலுக்கு வடமாநில அரசியல்வாதிகளையும் இங்கு அதிகமாக பார்க்கலாம் என்றார்.

243 தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு, 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன்னர், மக்களை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டன. ஒரே மாநிலத்தில் பல கட்டமாக நடத்திய அனுபவம் மத்திய அரசுக்கு உள்ளது. இந்த முறை தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தல் என்கிற பேச்சுக்கே இடமில்லை, குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றார். சரிதான்!