இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

தொழில்துறை உற்பத்தி குறித்து புள்ளிவிவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரம், ஆகஸ்ட் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் குறித்த தகவல்கள், செப்டம்பர் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நம் நாட்டின் கைவசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரம் ஆகியவை வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களாக நம் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..
தொழில்துறை

நம் நாட்டில் தற்போது சுமார் 68 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் சுமார் 52 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். சுமார் 16 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து முதலீட்டை திரும்ப பெற்று வந்த அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் அதிகளவில் பங்குகளை வாங்கினர். வரும் வாரமும் இது தொடரும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடந்த வாரம் உயர்ந்தது. இந்த வாரமும் அது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..
கச்சா எண்ணெய்

அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.