பங்குச் சந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்த மத்திய அரசின் சீர்திருத்தங்கள்.. சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்ந்தது

பங்குச் சந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்த மத்திய அரசின் சீர்திருத்தங்கள்.. சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்ந்தது.

மத்திய அரசு நேற்று அறிவித்த தொலைத்தொடர்பு துறைக்கான தொகுப்பு மற்றும் வாகன துறைக்கான பி.எல்.ஐ. திட்டம் ஆகியவை சீர்த்திருத்தங்களை பொறுத்தவரை அரசாங்கம் வேகமாக முன்னோக்கி செல்லும் நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.இது பங்கு சந்தைகளுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டி.சி.எஸ். மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்த மத்திய அரசின் சீர்திருத்தங்கள்.. சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்ந்தது
ஐ.டி.சி. தயாரிப்புகள்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,677 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,594 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.260.80 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.12 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்த மத்திய அரசின் சீர்திருத்தங்கள்.. சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்ந்தது
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 417.96 புள்ளிகள் உயர்ந்து 59,141.16 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 110.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,629.50 புள்ளிகளில் முடிவுற்றது.