கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும்.. நிபுணர்கள் கணிப்பு

 

கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும்.. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடந்த மார்ச் நிதி நிலை முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு வெளியானது. கடந்த ஏப்ரல் மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரத்தை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாய் குறித்த புள்ளிவிவரம் நேற்று முன்தினம் வெளியானது. தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இவை இன்றைய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும்.

கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும்.. நிபுணர்கள் கணிப்பு
தேர்தல்

இந்த வாரம் கோடக் மகிந்திரா வங்கி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஹீரோமோட்டோகார்ப் உள்பட மொத்தம் 125 நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று 4 லட்சத்தை தாண்டியது. மே அல்லது ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்துவதும் அதிகரிக்கும். மார்கிட் மானுபேக்சரிங் பி.எம்.ஐ., ஏப்ரல் மாத வர்த்தக பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரம் இன்று வெளியாகிறது. கடந்த ஏப்ரல் 23ம் தேதியுடன் நிறைவடைந்த 15 தினங்களில் வங்கிகள் வழங்கிய கடன் மற்றும் திரட்டிய டெபாசிட் குறித்த புள்ளிவிவரம் மற்றும் கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரம் ஆகியவை வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும்.. நிபுணர்கள் கணிப்பு
கோடக் மகிந்திரா வங்கி

இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.