Home வணிகம் இந்த வார பங்கு வர்த்தத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து

இந்த வார பங்கு வர்த்தத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து

நிறுவனங்களின் நிதி முடிவுகள், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்த வார பங்கு வர்த்தத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் எச்.பி.சி.எல். உள்பட மொத்தம் 170க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் நிலவரம் தற்போது சிறிது ஆறுதல் அளிப்பது போல் உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த வார பங்கு வர்த்தத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து
டாடா மோட்டார்ஸ்

தொற்றுநோயுடன் உலக நாடுகள் போராடி வருவதால் உலோக பொருட்கள் குறிப்பாக ஸ்டீலின் விலை அதிகரித்து வருகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து திரும்ப பெற்று வருகின்றனர். இது பங்குச் சந்தைகளுக்கு கவலையளிக்கும் விஷயமாகும். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் முதலீடு செய்வது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். இன்று ஏப்ரல் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வெளிவருகிறது. மே 7ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகள் வழங்கிய கடன் மற்றும் திரட்டி டெபாசிட் குறித்த புள்ளிவிவரம் மற்றும் மே 14ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி குறித்த புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது.

இந்த வார பங்கு வர்த்தத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து
கொரோனா வைரஸ்

அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

இந்த வார பங்கு வர்த்தத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews