இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணி்ப்பு

 

இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணி்ப்பு

நிறுவனங்களின நிதி முடிவுகள், கொரோனா வைரஸ் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், ஏசியன் பெயிண்ட்ஸ், சிப்லா, வேதாந்தா, எல் அண்டு டி, பிர்லா கார்ப்பரேஷன், அப்பல்லோ டயர்ஸ், ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர், டாடா பவர், வோல்டாஸ் மற்றும் எஸ்கார்ட்ஸ் உள்பட மொத்தம் 165 நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது மேலும் தினசரி கொரோனா இறப்பு 4 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. மேலும் முக்கியமான பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்துவதன் மூலம் பொருளாதாரததின் மீதான அழுத்தம் அதிகரிக்கும்.

இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணி்ப்பு
சிப்லா

இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் மேற்கொண்டு இருந்த முதலீட்டை தொடர்ந்து திரும்ப எடுத்து வருகின்றனர். இந்த மாதத்தில் இதுவரை ரூ.5 ஆயிரம் கோடிக்கு பங்குகளை நிகர விற்பனை செய்துள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் இதுவரை ரூ.2,135 கோடிக்கு நிகர மதிப்புக்கு பங்குகளை வாங்கி உள்ளனர். கடந்த மார்ச் மாத தொழில்துறை உற்பத்தி, கடந்த ஏப்ரல் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்து புள்ளிவிவரங்கள் வரும் புதன்கிழமையன்று வெளியாக உள்ளது. ஏப்ரல் மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வெள்ளிக்கிழமையன்று வெளிவருகிறது.

இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணி்ப்பு
பணவீக்கம்

கடந்த மே 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரம் ஆகியவை வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.