மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்ததகம்… சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது…

 

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்ததகம்… சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட சில சர்வதேச நிலவரங்கள் பங்கு வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. அதேசமயம், கடந்த டிசம்பர் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டது, கடந்த பிப்ரவரி மாதத்தில் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது போன்றவை இந்த வார வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு கை கொடுத்தன.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்ததகம்… சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது…
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.)

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.207.45 லட்சம் கோடியாக உயர்ந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 26 ) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.200.81 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.64 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்ததகம்… சென்செக்ஸ் 405 புள்ளிகள் உயர்ந்தது…
பங்கு வர்த்தகம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 405.33 புள்ளிகள் உயர்ந்து 50,405.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 408.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,938.10 புள்ளிகளில் முடிவுற்றது.