சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 599 புள்ளிகள் வீழ்ச்சி..

 

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 599 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 599 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும 30 நிறுவன பங்குகளில், அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் டாக்டர்ரெட்டீஸ் உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 599 புள்ளிகள் வீழ்ச்சி..
எச்.டி.எப்.சி. நிறுவனம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,596 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,382 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 192 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.209.74 லட்சம் கோடியாக இருந்தது.

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 599 புள்ளிகள் வீழ்ச்சி..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 598.57 புள்ளிகள் சரிந்து 50,846.08 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 164.85 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,080.75 புள்ளிகளில் முடிவுற்றது.