4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.39 ஆயிரம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்தது.

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.39 ஆயிரம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்தது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே நடைபெற்றது. நம் நாட்டில் கொரோன வைரஸ் பரவல் அதிகரித்து வருவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அதிகரிப்பு போன்றவை பங்கு வர்த்தகத்துக்கு பாதகமாக இருந்தாலும், அமெரிக்க பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு கிடைக்கும் ஆதாயம் அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்றவை பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது. ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது.

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.39 ஆயிரம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்தது.
கொரோனா வைரஸ் பரிசோதனை

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.207.84 லட்சம் கோடியாக உயர்ந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 5 ) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.207.45 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.39 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.39 ஆயிரம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்தது.
பங்கு வர்த்தகம் ஏற்றம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 386.76 புள்ளிகள் உயர்ந்து 50,792.08 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 92.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,030.95 புள்ளிகளில் முடிவுற்றது.