இந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

 

இந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் வாகன விற்பனை உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு சந்தைகளின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்க பத்திரங்களில் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளதால் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பங்குச் சந்தைகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப பெற்று அமெரிக்க பத்திரங்களில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. இது பங்குச் சந்தைகளுக்கு பாதகமான செய்தியாகும். கடந்த பிப்ரவரி மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இன்று முதல் வெளியிடும். எம்.டி.ஏ.ஆர். டெக்னாலஜிஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு மார்ச் 3ம் தேதி தொடங்கி 5ம் தேதி நிறைவடைகிறது.

இந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..
கார்கள்

மகாராஷ்டிரா, கேரளா உள்பட நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் திட்டமிட்டப்படி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அமைப்பின் கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு கடந்த டிசம்பர் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டு இருந்தது.

இந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..
கோவிட்-19 தடுப்பூசி மருந்து

மார்கிட் மானுபாக்சரிங் மற்றும் சேவைகள் பி.எம்.ஐ. டேட்டா ஆகியவை முறையே இன்று மற்றும் புதன்கிழமை வெளியாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது முக்கிய பொருளாதாரம் சார்ந்த புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிட உள்ளன. இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.