இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்ட இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், கோல் இந்தியா, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், என்.டி.பி.சி., எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட சுமார் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் 25 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் 2 நாள் கூட்டத்தில் எடுக்கப்படும் (வட்டி விகிதம் தொடர்பாக) முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியாக உள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகள் அதனை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
கோல் இந்தியா

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். கடந்த மே மாத சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரம் இன்று வெளியாகிறது. கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் தொடர்பான புள்ளிவிவரம், ஜூன் 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு மற்றும் கடந்த 2-4ம் தேதிகளில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த முக்கிய துளிகள் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி

ஷியாம் மெட்டாலிக்ஸ் (ஜூன் 14-16), சோனா காம்ஸ்டார் (ஜூன் 14-16), டோட்லா பால் (ஜூன் 16-18) மற்றும் கே.ஐ.எம்.எஸ். ஹாஸ்பிட்டல்ஸ் (ஜூன் 16-18) ஆகிய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.