சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை

 

சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.

நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட், 3 வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் கணக்குகளை முடக்கியது. இவை அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களின் சுமார் ரூ.43,500 கோடி மதிப்புகளை பங்குகளை வைத்திருக்கின்றன. இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தது. இன்று பங்குச் சந்தை ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.74 ஆயிரம் கோடி குறைந்தது.

சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் தொடங்கியது. ஆனால் பின்னர் பங்கு வர்த்தகம் மளமளவென சரிவை சந்தித்தது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், கோடக் மகிந்திரா மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,659 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,657 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.230.86 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது

சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்தது.. அடி வாங்கிய அதானி குழும நிறுவன பங்குகள் விலை
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.77 புள்ளிகள் உயர்ந்து 52,551.53 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 12.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,811.85 புள்ளிகளில் முடிவுற்றது.