Home வணிகம் புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் பவர் கிரிட் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்தது.
டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,776 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,409 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 141 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.231.16 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.89 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்தது.
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 174.29 புள்ளிகள் உயர்ந்து 52,474.76 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 61.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,799.35 புள்ளிகளில் முடிவுற்றது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 174 புள்ளிகள் உயர்ந்தது.
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews