விற்பனையில் சறுக்கிய ஹீரோ.. ஹோண்டா, டி.வி.எஸ். வாகன விற்பனை ஜோர்

 

விற்பனையில் சறுக்கிய ஹீரோ.. ஹோண்டா, டி.வி.எஸ். வாகன விற்பனை ஜோர்

கடந்த ஜூலை மாதத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை சரிவு கண்டது. அதேசமயம் ஹோண்டா மற்றும் டி.வி.எஸ். நிறுவனங்களின் வாகன விற்பனை வளர்ச்சி கண்டது.

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 3.85 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூலை மாதத்தில் ஹீரோ நிறுவனம் மொத்தம் 3.21 லட்சம் இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

விற்பனையில் சறுக்கிய ஹீரோ.. ஹோண்டா, டி.வி.எஸ். வாகன விற்பனை ஜோர்
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி

நாட்டின் முன்னணி இரு மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 2.78 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2020 ஜூலையுடன் ஒப்பிட்டால் கடந்த மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் வாகன விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் 2.52 லட்சம் வாகனங்களை மட்டுமே டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி விற்பனை செய்து இருந்தது.

விற்பனையில் சறுக்கிய ஹீரோ.. ஹோண்டா, டி.வி.எஸ். வாகன விற்பனை ஜோர்
ஹீரோ மோட்டோகார்ப் வாகனங்கள்

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 4.54 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 13 சதவீதம் குறைவாகும். 2020 ஜூலை மாதத்தில் ஹீரோ நிறுவனம் மொத்தம் 5.20 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.