பலத்த அடி வாங்கிய பங்குச் வர்த்தகம்…. சென்செக்ஸ் 486 புள்ளிகள் வீழ்ச்சி

 

பலத்த அடி வாங்கிய பங்குச் வர்த்தகம்…. சென்செக்ஸ் 486 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மரண அடி வாங்கியது. சென்செக்ஸ் 486 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

உலகெங்கிலும் கோவிட்-19ன் டெல்டா பரவல், சீனா பொருளாதாரத்தில் மந்தநிலைக்கான அறிகுறிகள் உள்ளிட்டவை சர்வதேச நிதி சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் கணிப்பு, நிறுவனங்களின் கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா ஸ்டீல் மற்றும் சன் பார்மா உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பலத்த அடி வாங்கிய பங்குச் வர்த்தகம்…. சென்செக்ஸ் 486 புள்ளிகள் வீழ்ச்சி
டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,451 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,734 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 145 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.230.85 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.36 லட்சம் கோடியை இழந்தனர்.

பலத்த அடி வாங்கிய பங்குச் வர்த்தகம்…. சென்செக்ஸ் 486 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 485.82 புள்ளிகள் சரிந்து 52,568.94 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 151.75 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,727.90 புள்ளிகளில் முடிவுற்றது.