இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், வட்டி விகிதம் தொடர்பான அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, எல் அண்டு டி, டாடா மோட்டார்ஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி. மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகியவை கடந்த வார இறுதியில் தங்களது ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டன. அவற்றின் தாக்கம் இன்றைய பங்கு வர்த்தகத்தில் வெளிப்படலாம்.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..
டாடா மோட்டார்ஸ்

அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் வரும் 28ம் தேதி வெளியாகும். உலகமே இதனை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வரும் வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்றைய தினம் ஜூலை மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். வரும் நாட்களில் நம் நாட்டில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு சரசாரியாக 40 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. கொரோனா நிலவரமும் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..
கச்சா எண்ணெய்

இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.