Home வணிகம் சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.96 லட்சம் கோடி லாபம்

சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.96 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்தது.

சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.96 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த சில தினங்களாக பங்கு வர்த்தகம் தொடர் சரிவை சந்தித்தது. பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைந்து இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அந்நிறுவன பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.96 லட்சம் கோடி லாபம்
இந்துஸ்தான் யூனிலீவர்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,185 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,062 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 140 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.233.99 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.96 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.96 லட்சம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 638.70 புள்ளிகள் உயர்ந்து 52,837.21 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 191.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,824.05 புள்ளிகளில் முடிவுற்றது.

சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.96 லட்சம் கோடி லாபம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்து கடவுள்களை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது!

இந்து மத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். சிறுபான்மை சமூகத்தின் உரிமை...

குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

தனது கணவன் திடீரென்று கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணவன் உயிர் இழந்து விடுவார் என்பதை உறுதி செய்து கொண்ட மனைவி,...

“சென்னையிலிருந்து கடலூர், நாகைக்கு பயணிகள் கப்பல்”

சென்னை -புதுச்சேரி- காரைக்கால் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து...

தமிழகத்துக்கான 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகிறது!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,830பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 44 ஆயிரத்து 870ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 24 பேர்...
- Advertisment -
TopTamilNews