புதன்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.. இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?

 

புதன்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.. இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளி்ட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

பக்ரீத் முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளுக்கு வரும் 21ம் தேதியன்று (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, அம்புஜா சிமெண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பயோகான் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. தற்போது நம் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. மேலும் 40 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

புதன்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.. இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?
விடுமுறை

சிறப்பு ரசாயன நிறுவனமான தத்வா சிந்தன் பார்மா செம் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இந்த வாரத்திலும் 2 நாட்கள் நடைபெறும். ஜி.ஆர். இன்ப்ராபுரோஜெட்ஸ் மற்றும் கிளீன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன. சுமோட்டோ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஒதுக்கீடு வரும் 22ம் தேதியன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 23ம் தேதியன்று, பங்கு ஒதுக்கப்படாதவர்களுக்கு அந்நிறுவனம் பணத்தை திருப்பி அளிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.. இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளில் முதலீடுகளை செய்தததை காட்டிலும் அதிகளவில் விற்பனை செய்து இருந்தனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை குவித்தது பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக அமைந்தது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.