முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த வார பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு..

 

முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த வார பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. சென்செக்ஸ் 156 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான கடந்த திங்கட்கிழமையன்று வர்த்கம் சரிவு கண்டது. அதன் பிறகு அடுத்த 2 தினங்கள் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. ஆனால் நேற்றும், இன்றும் பங்கு வர்த்கம் பலத்த அடி வாங்கியது. ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றது, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்தது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப பெற்றது போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த வார பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு..
ஜோ பைடன்

கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.194.43 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 15) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.195.48 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.05 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

முதலீட்டாளர்களை ஏமாற்றிய இந்த வார பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 156.13 புள்ளிகள் குறைந்து 48,878.54 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 61.80 புள்ளிகள் சரிவு கண்டு 14,371.90 புள்ளிகளில் முடிவுற்றது.