தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் அடி வாங்கிய வர்த்தகம்… சென்செக்ஸ் 746 புள்ளிகள் வீழ்ச்சி

 

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் அடி வாங்கிய வர்த்தகம்… சென்செக்ஸ் 746 புள்ளிகள் வீழ்ச்சி

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ. லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

சில நிதி நிறுவனங்கள் தங்களது டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதனை தொடர்ந்து வங்கி துறையை சேர்ந்த பல வங்கிகளின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்று தள்ளினர். அமெரிக்காவில் வேலையின்மை தொடர்ந்து கவலைக்குரியதாக இருப்பது, ஐரோப்பிய ரிசர்வ் வங்கி நேற்று கடன் செலவினங்களை மிகக் குறைவான அளவில் அளவில் வைத்திருப்பதற்கான உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்தியது இது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் ஆட்டோ மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் அடி வாங்கிய வர்த்தகம்… சென்செக்ஸ் 746 புள்ளிகள் வீழ்ச்சி
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 980 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,004 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 133 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.194.43 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.24 லட்சம் கோடியை இழந்தனர்.

தொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தைகளில் அடி வாங்கிய வர்த்தகம்… சென்செக்ஸ் 746 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 746.22 புள்ளிகள் சரிந்து 48,878.54 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 218.45 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,371.90 புள்ளிகளில் முடிவுற்றது.