50 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.04 லட்சம் கோடி நஷ்டம்..

 

50 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.04 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டு விட்டு சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்து வருவது, நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதோடு, பொருளாதாரத்தில் மீண்டும் வளர்ச்சி குறித்த நம்பிக்கை, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருப்பது, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கூடுதலா நிதி தொகுப்புகளை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு மற்றும் சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் மளமளவென ஏற்றம் கண்டது. பங்குச் சந்தை வரலாற்றி முதல் முறையாக இன்று சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. ஆனால் அதன் பிறகு பங்கு வர்த்தகம் சரிவு கண்டது.

50 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.04 லட்சம் கோடி நஷ்டம்..
பார்தி ஏர்டெல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி. மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,113 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,909 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.196.67 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.04 லட்சம் கோடியை இழந்தனர்.

50 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.04 லட்சம் கோடி நஷ்டம்..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 167.36 புள்ளிகள் சரிந்து 49,624.76 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 54.35 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,590.35 புள்ளிகளில் முடிவுற்றது.