அடுத்த 5 நாட்கள்.. பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு

 

அடுத்த 5 நாட்கள்.. பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பூசி, நிறுவனங்களின் நிதி முடிவுகள் உள்ளிட்டவை வரும் வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட தொடங்கி விட்டன. அந்த வகையில், வரும் வாரம் இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், எச்.டி.எப்.சி. வங்கி உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது 2020 டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி விட்டது. அதேசமயம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

அடுத்த 5 நாட்கள்.. பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
இன்போசிஸ்

கொரேனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நாளை பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆன்லைனில் பேச உள்ளார். இம்மாதம் 16ம் தேதி முதல் நம் நாட்டில் தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. கடந்த நவம்பர் மாத தொழில்துறை உற்பத்தி, மேனுபாக்சரிங் மற்றும் கடந்த டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள் வரும செவ்வாய்க்கிழமையன்று வெளிவருகிறது. டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் தொடர்பான புள்ளிவிவரம் வியாழக்கிழமையன்று வெளியாகிறது.

அடுத்த 5 நாட்கள்.. பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?.. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த 1ம் தேதியோடு நிறைவடைந்த கடந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் தொடர்பான புள்ளி விவரங்கள், ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு மற்றும் கடந்த டிசம்பர் மாத வர்த்தக நிலவரம் தொடர்பாக புள்ளிவிவரங்கள் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளிவர உள்ளது. இது தவிர பட்ஜெட் எதிர்பார்ப்புகள், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு, அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களும் வரும் வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.