பட்ஜெட் 2021 – வரிச் சலுகைகளை அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன் ?

 

பட்ஜெட் 2021 – வரிச் சலுகைகளை அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன் ?

2021 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். கொரோனா ஊடரங்கு காரணமாக நடப்பு ஆண்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், வரும் ஆண்டுக்கான பட்ஜெட் முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.

பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அளிக்க வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்ப்புகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல வரி விலக்குகளை எதிர்பார்க்கின்றனர். நிதி ஊக்குவிப்புகள் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், தனிநபர் வருமான வரிச் சலுகைகளிலும் மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்ஜெட் 2021 – வரிச் சலுகைகளை அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன் ?

தனிநபர் வருமான வரிச் சலுகைகளில் மாற்றங்களை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் எழுப்பட்டு வந்தன. அதன்படி கடந்த ஆண்டில் சில மாற்றங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

தற்போது தனிநபர் வருமான வரிவிலக்கு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு 5 சதவீத வரி பிடித்தம் செய்யப்படுகிறது. ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வருமானம் கொண்டவர்களுக்கு 20 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமான கொண்டவர்கள் 30 சதவீத வரி வரம்புக்குள்ளும் உள்ளனர். இந்த வரி வரம்புகளில் மாற்றங்கள் இருக்கும் என கணிப்புகள் வெளியாகியுள்ள. தனி நபர் வருமான வரிச் சலுகைகளில், வீடு வாங்குபவர்களுக்கு சலுகைகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பட்ஜெட் 2021 – வரிச் சலுகைகளை அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன் ?

குறிப்பாக 80 சி வரம்பில் தற்போது ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளை பெறலாம். இந்த வரிச் சலுகை வரம்பு இரண்டு லட்ச ரூபாயக உயர்த்தப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கைகளுக்கு தற்போது மத்திய அரசு செவிசாய்க்க உள்ளதாக தெரிகிறது.

தவிர, மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகைகளுக்கு 80டி படி தற்போது 25 ஆயிரம் வரை வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இதை 50 ஆயிரமாக உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்த வரிச் சலுகைகள் மூலம் தனிநபர் வருமான வரிச் சலுகைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். இதன் மூலம் மருத்துவ காப்பீடு எடுப்பது அதிகரிக்கும்.

மத்திய அரசு 2023 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்கிற இலக்கை வைத்துள்ளது. அந்த இலக்கை எட்டும்விதமாக வீடு வாங்குபவர்களுக்கு வீட்டுக்கடன் வட்டி, அசல் செலுத்துவதில் வரிச் சலுகை அளிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.