நல்ல காலம் பொறந்திருச்சு… வாகன விற்பனை அமோகம்.. தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி

 

நல்ல காலம் பொறந்திருச்சு… வாகன விற்பனை அமோகம்.. தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி

கடந்த பிப்ரவரி மாதத்தில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் வாகன விற்பனை நிலவரம் சிறப்பாக இருந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 61,365 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2020 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 51.07 சதவீதம் அதிகமாகும். 2020 பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் மொத்தம் 40,619 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டில் மட்டும் 58,473 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டீலும் 54 சதவீதம் அதிகமாகும்.

நல்ல காலம் பொறந்திருச்சு… வாகன விற்பனை அமோகம்.. தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி

உள்நாட்டு இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2.97 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். 2020 பிப்ரவரி மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி 2.53 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

நல்ல காலம் பொறந்திருச்சு… வாகன விற்பனை அமோகம்.. தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி
மாருதி சுசுகி இந்தியா

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த பிப்ரவரியில் மொத்தம் 1.64 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 11.8 சதவீதம் அதிகமாகும். 2020 பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா மொத்தம் 1.47 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தது. இந்நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 1.52 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 11,486 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.