சென்செக்ஸ் 1,939 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.5.41 லட்சம் கோடி நஷ்டம்

சென்செக்ஸ் 1,939 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.5.41 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,939 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

நம் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது, அமெரிக்க கருவூல பத்திரங்களில் கிடைக்கும் லாபம் அதிகரிப்பு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் கிழக்கு சிரியா பகுதிகளில் தாக்குதல் நடத்து உத்தரவிட்டது, நம் நாட்டின் கடந்த டிசம்பர் காலண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட உள்ளது இது குறித்து எச்சரிக்கை மனநிலை போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மரண அடி வாங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளின் விலையும் இன்று வீழ்ச்சி கண்டது.

சென்செக்ஸ் 1,939 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.5.41 லட்சம் கோடி நஷ்டம்
ஜோ பைடன்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,062 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,853 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 186 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.200.81 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.5.41 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 1,939 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.5.41 லட்சம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,939.32 புள்ளிகள் சரிந்து 49,099.99 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 568.20 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,529.15 புள்ளிகளில் முடிவுற்றது.