சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.63 லட்சம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.63 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் தேசிய பங்குச் சந்தையில் தொழில்நுட்பம் காரணமாக பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்தபின் மதியம் 3.30 மணிக்கு பின் தொடங்கியது. இதனால் பங்கு வர்த்தகம் நேரம் மாலை 5 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. பங்கு வர்த்தகம் மீண்டும் தொடங்கிய பிறகு வர்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், பவர்கிரிட் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.63 லட்சம் கோடி லாபம்..
ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,863 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,069 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 167 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.204.01 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.63 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 1,030 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.63 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம் உயர்வு

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,030.28 புள்ளிகள் உயர்ந்து 50,781.69 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 274.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,982.00 புள்ளிகளில் முடிவுற்றது.