கொரோனா, ஜி.டி.பி. உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் முன்னறிவிப்பு

கொரோனா, ஜி.டி.பி. உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் முன்னறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல், ஜி.டி.பி. உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) குறித்த புள்ளிவிவரத்தை வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியிடுகிறது. அந்த காலாண்டில் ஜி.டி.பி.யில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு இருக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். ரயில்டெல், நுரேகா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இந்த பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

கொரோனா, ஜி.டி.பி. உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் முன்னறிவிப்பு
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஹெரன்பா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த வாரம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகிறது. இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வரும் 23ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவடைய உள்ளது. வரும் வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்று பிப்ரவரி மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். தொடர்ந்து 5வது மாதமாக அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

கொரோனா, ஜி.டி.பி. உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் முன்னறிவிப்பு
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.)

அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதாரம் சார்ந்த புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற தாழ்வை முடிவு செய்யும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனா்.