5 தினங்களில் 655 புள்ளிகளை பறிகொடுத்த சென்செக்ஸ்… ஆனால் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

5 தினங்களில் 655 புள்ளிகளை பறிகொடுத்த சென்செக்ஸ்… ஆனால் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. இருப்பினும், முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. வாரத்தின் முதல் வர்த்தக தினமான கடந்த திங்கட்கிழமையன்று மட்டும் பங்கு வர்த்தகம் ஏற்றத்தை கண்டது. மற்ற 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டினர். பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்து இருந்தால் லாபம் நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை விற்று தள்ளினர், மீண்டும் கொரோனா வைரஸ் குறித்து கவலை எழுந்துள்ளது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.

5 தினங்களில் 655 புள்ளிகளை பறிகொடுத்த சென்செக்ஸ்… ஆனால் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..
கொரோனா வைரஸ்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.204.12 லட்சம் கோடியாக உயர்ந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 12 ) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.203.91 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

5 தினங்களில் 655 புள்ளிகளை பறிகொடுத்த சென்செக்ஸ்… ஆனால் ரூ.21 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்..
மும்பை பங்குச் சந்தை

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 654.54 புள்ளிகள் குறைந்து 50,889.76 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 181.55 புள்ளிகள் சரிவு கண்டு 14,981.75 புள்ளிகளில் முடிவுற்றது.