மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயர்ந்தது

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. கடந்த டிசம்பரில் தொழில்துறை உற்பத்தி 1 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது இது நம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தநிலை விலகி வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்தது. சர்வதேச நாடுகள் கோவிட்-19 தடுப்பூசி போட தொடங்கி விட்டன. நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக இருந்தது, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை குவிப்பது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயர்ந்தது
கோவிட்-19 தடுப்பூசி மருந்து

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் டாக்டர் ரெட்டீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயர்ந்தது
பஜாஜ் பைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,374 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,667 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.205.12 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயர்ந்தது
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 609.83 புள்ளிகள் உயர்ந்து 52,154.13 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 151.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,314.70 புள்ளிகளில் முடிவுற்றது.