இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ், அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது மேலும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் விகிதமும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் (ஆகஸ்ட் 23), அப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ் (ஆகஸ்ட் 24) மற்றும் செம்ப்லாஸ்ட் சன்மர் (ஆகஸ்ட் 24) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
கொரோனா வைரஸ்

மாதத்தின் கடைசி வியாழன்று பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும் என்பதால் இந்த வார வியாழக்கிழமை ஆகஸ்ட் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். ஆகஸ்ட் 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்து புள்ளிவிவரம் மற்றும் ஆகஸ்ட் 13ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் குறித்த புள்ளிவிவரங்கள் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
கச்சா எண்ணெய்

அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.