இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..

 

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகள் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

அதானி டோட்டல் கியாஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, கேஸ்ட்ரால், அப்பல்லோ டயா்ஸ், கோத்ரேஷ் பிராப்பர்ட்டிஸ், டாடா கெமிக்கல்ஸ், நால்கோ, ஏர்டெல், எஸ்.பி.ஐ. மற்றும் எச்.பி.சி.எல். உள்பட பல முன்னணி நிறுவனங்களின் கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் இந்த வாரம் வெளிவருகிறது. தேவயானி இன்டர்நேஷனல், விண்ட்லாஸ் பயோடெக், எக்ஸாரோ டைல்ஸ் மற்றும் க்ர்ஷ்னா டயக்னோஸ்டிக்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. கிளென்மார்க் லைப் சயின்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வரும் 6ம் தேதியன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..
பார்தி ஏர்டெல்

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் வரும் 4ம் தேதி தொடங்கி 6ம் தேதி முடிவடைகிறது. இந்த கூட்டத்தில். கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி முடிவு எடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4 மாதமாக கடந்த ஜூலையில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் அதிகளவில் விற்பனை செய்துள்ளனர்.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..
இந்திய ரிசர்வ் வங்கி

அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.