இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

தேவயானி இன்டர்நேஷனல், க்ர்ஷ்னா டயக்னாஸ்டிக்ஸ், எக்ஸாரோ டைல்ஸ் மற்றும் விண்ட்லாஸ் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன. கார்டிரேட் டெக் மற்றும் நுவோகோ விஸ்டாஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வரும் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 97.46 சதவீதமாக உள்ளது. மேலும் இதுவரை சுமார் 53 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
பணவீக்கம்

கடந்த வாரம் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளை விற்பனை செய்ததை காட்டிலும் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தனர். கடந்த ஜூலை மாத மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் இன்று வெளிவருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி குறித்து புள்ளிவிவரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
கச்சா எண்ணெய்

அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.