இந்த வாரம் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனாலும் ரூ.2.39 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்

இந்த வாரம் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனாலும் ரூ.2.39 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 439 புள்ளிகள் குறைந்தது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையும், வாரத்தின் இறுதி நாளான இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. இடைப்பட்ட 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. நம் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் 2வது அலை பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பங்கு வர்த்தகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த வாரம் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனாலும் ரூ.2.39 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.209.63 லட்சம் கோடியாக உயர்ந்தது கடந்த வார வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 1) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.207.24 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.39 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்த வாரம் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்… ஆனாலும் ரூ.2.39 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்
இந்திய ரிசர்வ் வங்கி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 438.51 புள்ளிகள் சரிந்து 49,591.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 32.50 புள்ளிகள் சரிவு கண்டு 14,834.85 புள்ளிகளில் முடிவுற்றது.