கொரோனா, நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

 

கொரோனா, நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா நிலவரம், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ராமநவமியை முன்னிட்டு வரும் புதன்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், நெஸ்லே இந்தியா மற்றும் ஏ.சி.சி. உள்பட சுமார் 55 நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2.64 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் கூடுதலாக கட்டுப்பாடுகள் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதாரம் பாதிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். அதேவேளையில் இதுவரை நம் நாட்டில் 12 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா, நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலவரத்தை பார்த்து அன்னிய முதலீட்டடாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் உள்ளனர். கடந்த வாரத்தில் பங்குகளில் முதலீடு செய்ததை காட்டிலும் அதிகளவில் விற்பனை செய்தனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு நிலவரம் கொஞ்சம் கவலைப்பட கூடிய நிலையில்தான் உள்ளது. அமெரிக்க பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு கிடைக்கும் ஆதாயம் தற்போது குறைந்துள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவன பங்குகள் இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.

கொரோனா, நிதிநிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
கொரோனா வைரஸ் பரிசோதனை

கடந்த 9ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட், வழங்கிய கடன் குறித்து புள்ளிவிவரம், ஏப்ரல் 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்து புள்ளிவிவரம் ஆகியவை வரும் வெள்ளிக்கிழமையன்று வெளிவர உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்கள பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், சர்வதேச மற்றும உள்நாட்டு நிலவரங்களும் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கதை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.