வாரத்தின் முதல் நாளில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ரூ.3.46 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்

வாரத்தின் முதல் நாளில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ரூ.3.46 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 883 புள்ளிகள் குறைந்தது.

கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தில் இருப்பது, டெல்லி உள்பட பல மாநிலங்களில் லாக்டவுன், இரவு ஊரடங்கு போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் என்ற அச்சம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டாக்டர் ரெட்டீஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகளை தவிர்த்து மற்ற 28 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வாரத்தின் முதல் நாளில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ரூ.3.46 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்
இன்போசிஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 773 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,199 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 200 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.201.77 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.46 லட்சம் கோடியை இழந்தனர்.

வாரத்தின் முதல் நாளில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ரூ.3.46 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்
கொரோனா வைரஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 882.61 புள்ளிகள் சரிந்து 47,949.42 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 258.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,359.45 புள்ளிகளில் முடிவுற்றது.