இந்த வார பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

 

இந்த வார பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், கொரோனா வைரஸ் நிலவரம உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை இந்த வாரம் முதல் வெளியிட உள்ளன. டி.சி.எஸ். (இன்று), இன்போசிஸ் (புதன்கிழமை), விப்ரோ (வியாழன்), மைண்ட்ரீ, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் எச்.டி.ஐ.எல். உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவிக்க உள்ளன. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் 2வது அலை இடர்பாடு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி லாக்டவுனை அமல்படுத்தியுள்ளது.

இந்த வார பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..
டி.சி.எஸ்.

மேலும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இது பங்குச் சந்தைகளில் எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். முக்கிய மாநிலங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் வங்கிகளின் சொத்து மதிப்பு குறித்து கவலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த வாரம் வங்கி துறையை சேர்ந்த பங்குகளின் விலை பலத்த அடி வாங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரித்தால் அது வங்கி துறை பங்குகளில் எதிரொலிக்கும்.

இந்த வார பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்? பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..
பணவீக்கம்

கடந்த பிப்ரவாி மாத தொழிற்துறை உற்பத்தி, கடந்த மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியாகிறது. மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் புதன்கிழமை வெளியாகிறது. கடந்த மார்ச் மாத வர்த்தக பற்றாக்குறை (வியாழன்), ஏப்ரல் 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு (வெள்ளி) ஆகியவை வெளிவருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிட உள்ளன. இதுதவிர அமெரிக்க டாலருக்க நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.