பங்குச் சந்தைகளை அலற விட்ட கொரோனா வைரஸ்… ரூ.8.67 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

பங்குச் சந்தைகளை அலற விட்ட கொரோனா வைரஸ்… ரூ.8.67 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் 1,708 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தள்ளப்படுகின்றன. முழு லாக்டவுன் விதித்தால் பொருளாதார மீட்சியின் வேகத்தை தடுக்கும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் மந்தமான வேகம் மற்றும் சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை போன்றவை எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமான இழப்புகளை ஏற்படுத்தும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தைகளை அலற விட்ட கொரோனா வைரஸ்… ரூ.8.67 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட உள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் உள்ளனர். சர்வதேச நிலவரங்களும் பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில் இல்லை. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மரண அடி வாங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவன பங்கை தவிர்த்து மற்ற 29 நிறுவன பங்குகளின் விலையும் குறைந்தது.

பங்குச் சந்தைகளை அலற விட்ட கொரோனா வைரஸ்… ரூ.8.67 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
கொரோனா தடுப்பூசி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 511 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,477 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.200.96 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.8.67 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்குச் சந்தைகளை அலற விட்ட கொரோனா வைரஸ்… ரூ.8.67 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,707.94 புள்ளிகள் சரிந்து 47,883.38 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 524.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,310.80புள்ளிகளில் முடிவுற்றது.