2021 தமிழக தர்பார் … சட்டப்பேரவை செட் அமைத்து மாஸ் காட்டும் ரஜினி ரசிகர்கள்!

 

2021 தமிழக தர்பார் … சட்டப்பேரவை செட் அமைத்து மாஸ் காட்டும்  ரஜினி ரசிகர்கள்!

சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது.இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ttn

இந்நிலையில் தர்பார் கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. படத்திற்கான புரோமோஷன் தமிழகம் மட்டுமின்றி மும்பையிலும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.  அந்த வகையில், மணப்பாறையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சார்பில் 2021 தமிழக தர்பார் என்று குறிப்பிட்டு  தமிழ்நாடு தலைமை செயலகம் போன்று செட் அமைத்துள்ளனர்.  ரஜினி கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வேன் என்று கூறியதின் எதிரொலியாக, வருங்கால முதல்வர் என்ற ரேஞ்சுக்கு செட் அமைத்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்தியுள்ளார்கள்.

ttn

முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.