2021 சட்டசபை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த திமுக!

 

2021 சட்டசபை தேர்தலுக்காக  பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த திமுக!

3 வது முறையாக முதல்வர் ஆனார். அதன் பிறகு 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க அதிக பெரும்பான்மையுடன் வென்றது. 

தேர்தல் அரசியல் களத்தை  நன்கு தெரிந்து கொண்டவர்களுக்கு அதில்  கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு கணிசமாக இருப்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். காரணம்  மக்களை எப்படி கவர்வது, ஓட்டு வாங்க என்னென்ன செய்யலாம், வாக்குறுதிகளை எப்படி கொண்டு போய்  சேர்ப்பது என்பது  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைவந்தக்கலை.

ttn

அந்த வகையில் பலரும் அறிந்த ஒரு பரிட்சயமான முகம் , பெயர் ’ஐபேக்’ அதாவது “இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்சன் கமிட்டி” நிறுவனத்தின் பிரஷாந்த் கிஷோர். இவர் கொடுக்கும் ஆலோசனைகள் படி செயல்பட்டு தான்  2012இல் மோடி 3 வது முறையாக முதல்வர் ஆனார். அதன் பிறகு 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க அதிக பெரும்பான்மையுடன் வென்றது. 

ttn

இதை தொடர்ந்து 2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் நிதீஷ்குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரஷாந்த் கிஷோர் ஆந்திர அரசியலிலும் புகுந்து ஜெகன் மோகன் ரெட்டியை வெற்றிபெறச் செய்தார். இப்படி பல்வேறு மாநிலங்களில் பல தலைவர்களும் கட்சிகளும் பிரஷாந்த் கிஷோரை  நாடியுள்ளன.

ttn

இந்நிலையில்  திமுகவும் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ” 2021 சட்டசபை தேர்தலுக்காக  ஐ-பேக் அமைப்பில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அறிவார்ந்த மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட இளம் திறமையாளர்கள்  எங்களுடன் பணியாற்ற உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அத்துடன், நம்முடைய திட்டங்களை தமிழகத்தில் நிலைநிறுத்தி மீண்டும் மாநிலத்தில் முன்பிருந்த பெருமையை நிலைநாட்ட உதவுவார்கள்” என பதிவிட்டுள்ளார். இதற்கு  ஐபேக் நிறுவனம் டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.

ttn

முன்னதாக பிரஷாந்த் கிஷோரை சந்தித்து ரஜினி பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில் திமுக அவருடன் கைகோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.