2021 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக இணையத்தை கலக்கும் ரோபோ டான்ஸ்!

 

2021 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக இணையத்தை கலக்கும் ரோபோ டான்ஸ்!

புத்தாண்டை வரவேற்கும் விதமாக இணையத்தை கலக்கி வருகிறது ரோபோ டான்ஸ் வீடியோ. Do You Love Me என்கிற பாப் பாடலுக்கு சில ரோபோக்கள் சேர்ந்து ஆடும் நடனம் இணைய பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

எதிர்காலத்தில் ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த நடனங்கள் உள்ளன. அட்லஸ் ரோபோவுடன், நாய் வடிவிலான ரோபோவும், சக்கர ரோபோவும் இணைந்து நடனம் ஆடுகின்றன. பாடலில் வரிகளுக்கு ஏற்ப, நளினமான அசைவுகளுக்கு ஏற்ப ரோபோக்கள் அநாயசமாக ஆடும் நடனம் காண்பவர்களை கவர்ந்துவிடுகிறது. வீடியோவை வெளியிட்ட 24 மணி நேரத்துக்குள் உலகம் முழுவதும் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக இணையத்தை கலக்கும் ரோபோ டான்ஸ்!

அமெரிக்காவைச் சேர்ந்த பாஸ்டன் டைனமிக்ஸ் ரோபோடிக்ஸ் நிறுவனம், பலவிதமான பயன்பாடுகளுக்கு ஏற்ற ரோபோக்களை வடிவமைத்து வருகிறது. அந்த நிறுவனம் வடிவமைத்துள்ள அட்லஸ் வடிவிலான ரோபோ, நாய் வடிவிலான ரோபோக்களைக் கொண்டு இந்த நடன வீடியோவை உருவாக்கியுள்ளது.

முக்கியமாக இந்த வீடியோவில், ரோபோக்கள் அனைத்தும் இசையின் வேகத்துக்கு ஏற்ப குதித்தும், தாண்டியும், சுழன்றும் நடனம் ஆடுகின்றன. இதன் மூலம் ரோபோக்கள் மிக வேகமாக மனிதனைப் போல சுயமாக செயல்பட முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தவிர அந்த ரோபோக்கள் குழுவாக இணைந்து நடனம் ஆடுவதன் மூலம், பல்வேறு ரோபோக்கள் இணைந்து செயல்படுவதும் சாத்தியமாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிறுவனத்தை சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் கையகப்பத்தியது குறிப்பிடத்தக்கது. 1992 ஆம் ஆண்டில் பிரிட்டனின் மாசேசூட்ஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி பிரிவு மாணவர்களால் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமும் முதலீடு செய்தது. அதன்பின்னர் ஜப்பானின் சாப்ட்பேங்க் நிறுவனமும், தற்போது ஹூண்டாய் நிறுவனமும் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆண்டில் கொரோனா ஊரடங்கு முடக்கத்தினால் துவண்டு கிடந்த மக்களுக்கு, 2021 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக ரோபோ நடவனத்தை வெளியிட்டு , பாஸ்டன் டைனமிக்ஸ் புதிய நம்பிக்கை அளித்துள்ளது என்றால் மிகையில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.