2021ல் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி…. மண்ணின் மைந்தன் முதல்வர்…. அமித் ஷா உறுதி…

 

2021ல் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி…. மண்ணின் மைந்தன் முதல்வர்…. அமித் ஷா உறுதி…

2021ல் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும். முதல்வராக மண்ணின் மைந்தன் பொறுப்பேற்பார் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவுக்கு ஒருநாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்று இருந்தார். அங்கு நேற்று நடைபெற்ற பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. இந்தியாவுக்கு வந்துள்ள நம் பல கோடி சகோதரர்கள், துன்புறுத்தல் மற்றும் கொடுமையை எதிர்கொண்டவர்கள், அவர்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டனர், அவர்கள் வீட்டு பெண்கள் அவமரியாதையை எதிர்கொண்டார்கள் மற்றும் அவர்களின் கோயில்கள் மற்றும் குருத்வாராக்கள் இடிக்கப்பட்டன மற்றும் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு குடியுரிமை இல்லை.

மம்தா பானர்ஜி

பிரதமர் மோடிஜி தனது முதல் 5 ஆண்டு கால ஆட்சியில் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அடுத்த 5 ஆண்டுகளுக்காக, மேற்கு வங்கத்திலிருந்து 18 எம்.பி.க்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுடன் நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சியாக இருக்கும்போது குடியுரிமை திருத்த சட்டத்தின்  நோக்கங்களை ஆதரிக்கிறார். அதேவேளையில் ஆட்சி இருந்தால் திருப்திப்படுத்தும் கொள்கைகளை எடுத்து கொள்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டால் இந்த மாநிலத்தில் வன்முறை மற்றும் ரயில்வே சொத்துக்கள் சூறையாடப்பட்டது.

பா.ஜ.க.

2021ல் நடைபெறும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சியை அமைக்கும் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உள்ள குடும்ப வாரிசு திட்டம் போல் இல்லாமல்  மாநிலத்தின் முதல்வராக மண்ணின் மைந்தர் பொறுப்பேற்பார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 87 லட்சம் வாக்குகளை பெற்றது. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தல் 2.30 கோடி வாக்குகளை வாங்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.