மோடியின் இரட்டை வேடம் -கண் துடைப்பு நாடகம்; காங்கிரசின் கண்டிப்பும் எச்சரிக்கையும்

 

மோடியின் இரட்டை வேடம் -கண் துடைப்பு நாடகம்; காங்கிரசின் கண்டிப்பும் எச்சரிக்கையும்

அஞ்சல் துறை கணக்காளர்கள் தேர்வினை ஆங்கிலம், இந்தி வாயிலாக மட்டுமே எழுத முடியும் என்ற மத்திய அரசின் அறிவிக்கையை ரத்துசெய்து தமிழ்மொழி வாயிலாகவும் நடத்த வேண்டும் என்று டி.ஆர்.பாலு, எம்.பி. சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். மேலும், பல்வேறு தரப்பினரும் மத்திய அரசின் அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, மத்திய அரசு பின்வாங்கிவிட்டது. ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படு​ம் என்று தெரிவித்தது.

மோடியின் இரட்டை வேடம் -கண் துடைப்பு நாடகம்; காங்கிரசின் கண்டிப்பும் எச்சரிக்கையும்

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘’ புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழி திட்டத்தை திணிக்க முயன்றபோது, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ரயில்வே, அஞ்சல்வழி பணியாளர் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு வந்தபோது மீண்டும் பா.ஜ.க. அரசு பின்வாங்கியது. ஆனால், பா.ஜ.க. அரசின் ஒரே நோக்கம் இந்தி மொழியை திணிப்பது மட்டுமல்ல, புழக்கத்திலே இல்லாத சமஸ்கிருத மொழியை திணிப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’’ என்கிறார்.

‘’இந்தியாவில் சமஸ்கிருத மொழியை பரப்புவதற்காக கடந்த மூன்றாண்டுகளில் 643.83 கோடி ரூபாயை பா.ஜ.க.அரசு செலவழித்திருக்கிறது. செம்மொழி தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட ரூ.29 கோடியை விட 22 மடங்கு கூடுதலாக சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.’’ என்கிறார்.

மோடியின் இரட்டை வேடம் -கண் துடைப்பு நாடகம்; காங்கிரசின் கண்டிப்பும் எச்சரிக்கையும்

மேலும், ‘’ மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக டெல்லியில் ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்சதன் என்கிற அமைப்பை உருவாக்கி, அதன்மூலமாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 28,821 மட்டுமே. அதாவது. 121 கோடி மக்கள் தொகையில் 0.00198 சதவிகிதம் தான். இதற்குதான் மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் வரிப் பணத்தில் இருந்து நிதியை பாரபட்சமாக ஒதுக்கி வருகிறது. அதேநேரத்தில் செம்மொழி தகுதிபெற்ற தமிழ் மொழிக்கு கடந்த மூன்றாண்டுகளில் மொத்தம் ரூ.22.94 கோடி தான் மொத்தமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மத்திய பா.ஜ.க. அரசு தமிழ் உள்ளிட்ட மொழிகள் மீது எத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொண்டு வருகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை’’ என்கிறார்.

’’இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் புறக்கணித்து விட்டு சமஸ்கிருத மொழிக்கு மட்டும் நிதிகளை மத்திய பா.ஜ.க. அரசு வழங்கி வருவது கடுமையான கண்டனத்திற்குரியது’’ என்று சொல்லும் அழகிரி,

மோடியின் இரட்டை வேடம் -கண் துடைப்பு நாடகம்; காங்கிரசின் கண்டிப்பும் எச்சரிக்கையும்

‘’பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் திருக்குறளையும், மகாகவி பாரதியின் கவிதைகளையும் மேற்கோள் காட்டிவிட்டு, தமிழ் மொழியை வளர்க்க நிதியை ஒதுக்காமல் புறக்கணிப்பதை விட ஒரு இரட்டை வேடம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதன்மூலம் தமிழ் மொழி மீது பற்று இருப்பதைப் போல பிரதமர் மோடி கண்துடைப்பு நாடகம் நடத்தி வருகிறார். இதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை அப்பட்டமான தமிழ் விரோத போக்காகவே கருதுகிறோம்.


இந்தி, சமஸ்கிருத திணிப்பையும், இதற்காக மத்திய அரசு நிதியை வாரி வழங்குவதையும் தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை புறக்கணிப்பதையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய போக்கு தொடருமேயானால் மத்திய பா.ஜ.க. அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன்’’என்கிறார் அழுத்தமாக.