கொரோனாவுக்கு மத்தியிலும் கை விடாத ஜி.எஸ்.டி. … 2020ம் ஆண்டில் ரூ.10.93 லட்சம் கோடி கொடுத்த ஜி.எஸ்.டி…..

 

கொரோனாவுக்கு மத்தியிலும் கை விடாத ஜி.எஸ்.டி. … 2020ம் ஆண்டில் ரூ.10.93 லட்சம் கோடி கொடுத்த ஜி.எஸ்.டி…..

கடந்த 2020ம் ஆண்டில் ஜி.எஸ்.டி வாயிலாக மொத்தம் ரூ.10.93 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் குறைந்தது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் மிகவும் குறைந்தது.

கொரோனாவுக்கு மத்தியிலும் கை விடாத ஜி.எஸ்.டி. … 2020ம் ஆண்டில் ரூ.10.93 லட்சம் கோடி கொடுத்த ஜி.எஸ்.டி…..
ஜி.எஸ்.டி.

இருப்பினும் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் ஜி.எஸ்.டி. வருவாயாக மொத்தம் ரூ.10.93 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.1.15 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு மத்தியிலும் கை விடாத ஜி.எஸ்.டி. … 2020ம் ஆண்டில் ரூ.10.93 லட்சம் கோடி கொடுத்த ஜி.எஸ்.டி…..
ஜி.எஸ்.டி.

2020ம் ஆண்டின் ஜி.எஸ்.டி. வசூல்

ஜனவரி ரூ.1,10,818 கோடி
பிப்ரவரி ரூ.1,05,366 கோடி
மார்ச் ரூ. 97,597 கோடி
ஏப்ரல் ரூ. 32,294 கோடி
மே ரூ. 62,009 கோடி
ஜூன் ரூ. 90,917 கோடி
ஜூலை ரூ. 87,422 கோடி
ஆகஸ்ட் ரூ. 86,449 கோடி
செப்டம்பர் ரூ. 95,480 கோடி
அக்டோபர் ரூ.1,05,155 கோடி
நவம்பர் ரூ.1,04,963 கோடி
டிசம்பர் ரூ.1,15,174 கோடி

மொத்தம்- ரூ.10,93,644 கோடி