2020 டாப் 3 ஸ்மார்ட்போன்கள்

 

2020 டாப் 3 ஸ்மார்ட்போன்கள்

நாளுக்கு நாள் மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதுப் புது கேட்ஜெட்களும் வந்த வண்ணம்தான் உள்ளன. அறிமுகமாகும் கேட்ஜெட்களில் ஸ்மார்ட்போன்களுக்கே முதலிடம்.
அந்த வகையில், புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு முன் அவற்றின் பயன்பாடுகளை அறிந்து கொள்வதற்கு பலரும் முனைப்பு காட்டுகின்றனர்.

2020 டாப் 3 ஸ்மார்ட்போன்கள்

பொதுவாக ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, தொழில்நுட்ப சமாச்சாரங்கள் மற்றும் விலை போன்றவற்றையெல்லாம் பரிசீலித்த பின்னரே, மொபைல் தேர்வு செய்வது நமது பழக்கமாக உள்ளது.
அப்படி வாடிக்கையாளர்களின் தேர்வை பொறுத்து 2020 ஆம் ஆண்டில் பெரும்பாலானவர்களை கவர்ந்த செல்போன் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

2020 டாப் 3 ஸ்மார்ட்போன்கள்

அந்த வரிசையில், தொடர்ந்து முன்னிலையிலும், தனக்கென்று பெரும் ரசிக பட்டாளமே வைத்திருக்கும் நிறுவனமான ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக வெளியிட்டிருந்த ஐ போன் 11, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2020 டாப் 3 ஸ்மார்ட்போன்கள்

அதற்கு அடுத்ததாக கூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் மொபைல்கள் வரவேற்பை பெற்றுள்ளதாம். பிக்சல் 5 இந்த மாதம் இறுதியில் அறிமுகமாக உள்ள நிலையில் அதற்கு ‘அட்வான்ஸ் புக்கிங்’ இப்போதே தொடங்கி விட்டதாம்.

2020 டாப் 3 ஸ்மார்ட்போன்கள்

ஆண்ட்ராய்டு மொபைல் சந்தையில் தனக்கென பெரும் பங்கினை வைத்திருக்கும் சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சாம்சங் வெளியிட்ட S20, S20+, S20 Ultra ஆகிய ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம். தற்போது வெளியிடவுள்ள Samsung galaxy Zfold2 ஸ்மார்ட்போனும் பெரும் கவனமும் வரவேற்பும் பெற்றுள்ளது.