முதலீட்டாளர்களுக்கு ரூ.3.69 லட்சம் கோடி நஷ்டம்… இந்த வாரம் பங்கு வர்த்தகத்தை வீழ்ச்சி காண வைத்த ஜி.டி.பி.

முதலீட்டாளர்களுக்கு ரூ.3.69 லட்சம் கோடி நஷ்டம்… இந்த வாரம் பங்கு வர்த்தகத்தை வீழ்ச்சி காண வைத்த ஜி.டி.பி.

பங்கு வர்த்தகம் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. மேலும் சென்செக்ஸ் 1,110 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கடந்த ஜூன் காலண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. நிறுவனங்களின் நிதி முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது போன்றவை இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தன. அதேசமயம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை நன்றாக இருந்தது ஆனால் இது பங்கு வர்த்தகத்தின் எழுச்சிக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

முதலீட்டாளர்களுக்கு ரூ.3.69 லட்சம் கோடி நஷ்டம்… இந்த வாரம் பங்கு வர்த்தகத்தை வீழ்ச்சி காண வைத்த ஜி.டி.பி.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி

கடந்த திங்கள் முதல் நேற்று வரையிலான கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.63 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 28ம் தேதி) மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.32 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.69 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.3.69 லட்சம் கோடி நஷ்டம்… இந்த வாரம் பங்கு வர்த்தகத்தை வீழ்ச்சி காண வைத்த ஜி.டி.பி.
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,110.13 புள்ளிகள் குறைந்து 38,357.18 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 313.75 புள்ளிகள் இறங்கி 11,333.85 புள்ளிகளில் முடிவுற்றது.