சென்செக்ஸ் 634 புள்ளிகள் வீழ்ச்சி… ரூ.2.25 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

 

சென்செக்ஸ் 634 புள்ளிகள் வீழ்ச்சி… ரூ.2.25 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.25 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

வங்கிகள் 2 மாதங்களுக்கு கணக்குகளை வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது மற்றும் கடன் வாங்கியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் வங்கி மற்றும் நிதித்துறையை சேர்ந்த பங்குகளின் விலை மளமளவென இறங்கியது. பொருளாதார மீட்பு தொடர்பான சந்தேகம் எழுந்ததால் சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது அதன் தாக்கம் நம் நாட்டு பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா-சீனா இடையே பதற்றம் போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது.

சென்செக்ஸ் 634 புள்ளிகள் வீழ்ச்சி… ரூ.2.25 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..
மாருதி கார்ஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி சுசுகி நிறுவன பங்கின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், இண்டஸ்இந்த் வங்கி, ஐ.டி.சி. மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 29 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 634 புள்ளிகள் வீழ்ச்சி… ரூ.2.25 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..
ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,002 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,723 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 188 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.63 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

சென்செக்ஸ் 634 புள்ளிகள் வீழ்ச்சி… ரூ.2.25 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 633.76 புள்ளிகள் சரிந்து 38,357.18 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 193.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,333.85 புள்ளிகளில் முடிவுற்றது.