ரிசர்வ் வங்கி கூட்டம், அன்னிய முதலீடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

ரிசர்வ் வங்கி கூட்டம், அன்னிய முதலீடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி கூட்டம், வாகன விற்பனை புள்ளிவிவரம், அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் 3 நாள் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்குகிறது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வாரத்தில் 2020 செப்டம்பர் மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும். மசகன் டாக் ஷிப்பில்டர்ஸ், லிக்ஹிதா இன்ப்ராஸ்ட்ரக்சர், யூ.டி.ஐ. ஏ.எம்.சி. ஆகிய 3 நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடு வரும் நாட்களில் நடைபெற உள்ளது.

ரிசர்வ் வங்கி கூட்டம், அன்னிய முதலீடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி

செம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ், கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்கி விட்டது. அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டில் ரூ.10,491 கோடியை திரும்ப பெற்றனர். அந்த வாரம் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி கூட்டம், அன்னிய முதலீடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
பங்கு வர்த்தகம்

சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளது. இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்ததகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.