முதலீட்டாளர்களை கண்ணீர் விட வைத்த பங்கு வர்த்தகம்… ரூ.3.98 லட்சம் கோடி நஷ்டம்

 

முதலீட்டாளர்களை கண்ணீர் விட வைத்த பங்கு வர்த்தகம்… ரூ.3.98 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்குச் சந்தைகளில் சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்களுக்கு ரூ.3.98 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இறக்கத்துடன் தொடங்கியது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 லட்சத்தை தாண்டி விட்டது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நெகட்டிவ்வாக இருக்கும் என பல தரநிர்ணய் நிறுவனங்கள் கணித்துள்ளன. இன்று செப்டம்பர் மாத பங்கு முன்பேர வர்ததக கணக்கு முடிக்கப்பட்டதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று தள்ளினர் இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்ததகம் கடும் வீழ்ச்சி கண்டது.

முதலீட்டாளர்களை கண்ணீர் விட வைத்த பங்கு வர்த்தகம்… ரூ.3.98 லட்சம் கோடி நஷ்டம்
இந்துஸ்தான் யூனிலீவர்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 624 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,025 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 162 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.79 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.98 லட்சம் கோடியை இழந்தனர்.

முதலீட்டாளர்களை கண்ணீர் விட வைத்த பங்கு வர்த்தகம்… ரூ.3.98 லட்சம் கோடி நஷ்டம்
மும்பை பங்குச் சந்தை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தை தவிர மற்ற 29 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது. இன்று மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,114.82 புள்ளிகள் குறைந்து 36,553.60 புள்ளிகளில் நிலைகொண்டது.